Sunday, March 27, 2011

Thirukural - Chapter 41 Cont...

409 - மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங் கற்றா ரனைத்திலர் பாடு.

கற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டைப் போக்கிவிடும்.

Lower are men unlearned, though noble be their race,
Than low-born men adorned with learning's grace.


Explanation: The unlearned, though born in a high caste, are not equal in dignity to the learned; though they may have been born in a low caste.

2 comments:

  1. Dear Dr. I have translated the said Kural as follows:

    May be born in a highly cultured family but not equal
    To one who is highly educated but not so equal.
    இந்த சந்தர்ப்பத்தில் நான் ஒரு திருக்குறளைப்பற்றி புத்தகம் எழுதி உள்ளேன். அதை வாங்கி என்னுடைய முயற்சியை ஆதரிக்க இயலுமா?

    திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் ஓர் உளவியல் பார்வை
    திருக்குறளைப்பற்றி புத்தகம் எழுது உள்ளேன் என்றேன். என்ன திருக்குறளைப்பற்றி புத்தகம் எழுதி உள்ளீர்களா அதுதான் நுற்றுக்கணக்கில் எழுதி உள்ளார்களே நீங்கள் வேறு எழுதவேண்டுமா? கேட்டவர் என் நண்பர் தமிழ்பேராசிரியர். மேலே என்ன சொல்வதென்று தெரியாமல் நின்றேன்.

    ஓ நீங்கள் உளவியல் பேராசிரியராயிற்றே. எதாவது உளவியல் ரீதியில் விளக்கி உள்ளீர்களா? ஃபிராய்டு என்ன சொல்கிறார் திருக்குறளைப்பற்றி என்றார்.

    ஃபிராய்டு வழியில் அல்ல காக்னிட்டிவ் மற்றும் ஹுமனிஸ்ட் வழியில் பார்த்துள்ளேன்.

    எழுதி முடித்துவிட்டீர்களா?

    ஆமாம் அச்சில் உள்ளது என்றேன்.

    ஹும் விதி யாரை விட்டது. என்று அலுத்துக்கொண்டார்.

    ஆகா பிடிகிடைத்துவிட்டது என மனிதில் மகிழ்ந்தபடி விதியைப்பற்றி திருவள்ளுவர் என்ன கூறுகிறாரென்று நினைக்கிறீர்கள் என்றேன்.

    தமிழாசிரியருக்கு உற்சாகம் பிறந்து விட்டது. ஒரு குறள் - விதியைப்பற்றி திருவள்ளுவரின் கருத்தை ஆணித்தரமாகக்கூறும் குறள் - எது தெரியுமா? கேட்டு நிறுத்தினார்.

    நான் சொல்லுங்கள் என்றேன்.

    ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
    சூழினுந் தான்முந் துறும்

    380 வது குறள் என்றார்.

    அப்படியானால் 620 வது குறளில்

    ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்
    தாழா துஞற்று பவர்

    என்று ஊழை வெல்லமுடியும் என்று கூறுகிறாரே என்றேன்.

    அதுதான் திருவள்ளுவரிடத்தில் உள்ள சிக்கல். முயற்சியின் மேன்மையைக் கூறுவதற்காக அவ்வாறு கூறி உள்ளார் எனத்தான் கொள்ள வேண்டிஉள்ளது என்றார். குரளில் சுரத்து இல்லை. அது சரி இந்த முரண்பாட்டை நீங்கள் எவ்விதம் எதிர்கொண்டு உள்ளீர்கள் என்று கேட்டார்.

    நான் கூறினேன். . .

    ஊழை வெல்ல முடியும் என்ற குறள் வரும் அதிகாரம் ஆள்வினை உடைமை என்ற அதிகாரத்தில் வரும் கடைசிக்குறள். இந்தக்குறளுக்குமுன் இரண்டு குறள்கள் அதாவது 618 மற்றும் 619 ஆகிய இருகுறள்களும் விதிதொடர்பானவையே. அவற்றின் கருத்தோடு ஒட்டி இக்குறளினைப்பார்த்தால் முரண்பாடு விலகும் என்றேன். அப்படியா? நிமிர்ந்து அமர்ந்தார் பேராசிரியர்.

    பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந்
    தாள்வினை இன்மை பழி

    என்ற குறளில் வரும் பொறி என்ற சொல்லுக்கு ஒன்றைக்கற்றுக்கொள்வதற்கு ஏதுவாக உள்ள ஒன்று அதாவது உளவியலர் கூறும் aptitude என்று பொருள். ஒருவனிடத்தில் ஒரு பொறி அறவே இல்லாது போகலாம் அல்லது மிக அதிகமாக இருக்கலாம் அல்லது மிதமாக இருக்கலாம். அந்த நிலையில் அறிவறிந்து என்றால் தன்னுடைய நிலைமை எவ்வாறு உள்ளது என்று அறிந்து தனக்கு ஒரு பொறி அறவே இல்லையெனில் அதாவது அவனுடைய ஊழ் அவ்வாறு இருக்கிறதெனில் அத்துறையைத்தவிர்த்துவிட்டு எந்தத்துறையில் ஊழ் அதிகமாக உள்ளதோ அந்தத்துறையைத்தேர்ந்தெடுத்து தாளாது உழைத்தால் குறைவாக உள்ள குறைபாட்டையும் பெருமளவு வெற்றி பெறலாம் என்று திருவள்ளுவர் கூறுகிறார். அதாவது குறைவானபொறி ஊழ்வினை என்றாலும் தாளாது உழைப்பதால் அக்குறைபாட்டை பெருமளவில் வெற்றிகொள்ளலாம் என்று கூறுகிறாரென்றேன்.

    பேராசிரியர் எழுந்து நின்றார். எல்லாக்குறள்களுக்கும் இப்படி வித்தியாசமாகப்பொருள் கண்டு உள்ளீர்களா என்றார்.

    நான் இல்லை 584 குறட்பாக்களுக்குமட்டுமே புதிய பொருள் பயனுள்ள பொருள் தேவைப்படுகிறது. இக்காரணத்தினாலேயே இப்புத்தகத்தை எழுதிஉள்ளேன்.

    பேராசிரியர் புத்தகம் எங்கு கிடைக்கும் என்ன விலை என்றெல்லாம் வேகவேகமாக வினவினார்.

    அவருக்குக்கூறியதை உங்களுக்கும் கூறுகிறேன்.

    புத்தகத்தின் பெயர்: திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் - ஓர் உளவியல்பார்வை
    பக்கங்கள் : மேப் லித்தோ 574 பக்கங்கள்
    விலை: ரு.285/-
    கிடைக்குமிடம்: Dr.R.Venkatachalam, A 19 vaswani Bella Vista, Sitrampalya main road, Graphite Indida Junction, Bangalore 560048 என்றமுகவரிக்கு R.Venkatachalam என்றபெயரில் அட்பாஅர் டிராஃப்ட் அல்லடு செக் அல்லது மணி ஆர்டர் செய்யவும் புத்தகத்தை நான் அனுப்பி வைக்கிறேன்.
    09886406695 prof_venkat1947@yahoo.co.in

    ---------------------------------------------திருக்குறளை கற்றபிறகு பொய் சொல்ல இயலவில்லை. உண்மையில் தமிழாசிரியர் எவரையும் நான் சந்திக்கவில்லை. உங்களுக்குள் ஒரு ஆர்வத்தைத்தூண்டவே இவ்வாறு கற்பனையாக எழுதினேன். பிழைபொறுக்கவும்.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete