Tuesday, December 28, 2010

Thirukural - Chapter 32

311 - சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.

மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும் அதன் பொருட்டுப் பிறருக்குப் கேடு செய்யாமலிருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாகும்.

Though ill to neighbour wrought should glorious pride of wealth secure,
No ill to do is fixed decree of men in spirit pure.


Explanation: It is the determination of the spotless not to cause sorrow to others, although they could (by so causing) obtain the wealth which confers greatness.


312 - கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.

சினங்கொண்டு சொல்லாலோ செயலாலோ ஒருவன் துன்பம் தரும்போது அந்தத் துன்பத்தை அவனுக்குத் திரும்பச் செய்யாமல் தாங்கிக் கொள்வதே சிறந்த மனிதரின் கொள்கையாகும்.

Though malice work its worst, planning no ill return, to endure,
And work no ill, is fixed decree of men in spirit pure.


Explanation: It is the determination of the spotless not to do evil, even in return, to those who have cherished enmity and done them evil.


313 - செய்யாமற் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்.

யாருக்கும் கேடு செய்யாமல் இருப்பவருக்குப் பகைவர் கேடு செய்துவிட்டால் அதற்குப் பதிலாக அவருக்கு வரும் கேடு மீளாத் துன்பம் தரக் கூடியதாகும்.

Though unprovoked thy soul malicious foes should sting,
Retaliation wrought inevitable woes will bring.


Explanation: In an ascetic inflict suffering even on those who hate him, when he has not done them any evil, it will afterwards give him irretrievable sorrow.


314 - இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.

நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.

To punish wrong, with kindly benefits the doers ply;
Thus shame their souls; but pass the ill unheeded by.


Explanation: The (proper) punishment to those who have done evil (to you), is to put them to shame by showing them kindness, in return and to forget both the evil and the good done on both sides.


315 - அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போற் போற்றாக் கடை.

பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற முனையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை.

From wisdom's vaunted lore what doth the learner gain,
If as his own he guard not others' souls from pain?


Explanation: What benefit has he derived from his knowledge, who does not endeavour to keep off pain from another as much as from himself ?


316 - இன்னா எனத்தா னுணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கட் செயல்.

ஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் துன்பமானவை என்று அனுபவித்து அறிந்தவற்றை, மற்றவர்க்குச் செய்யாமலிருக்க வேண்டும்.

What his own soul has felt as bitter pain,
From making others feel should man abstain.


Explanation: Let not a man consent to do those things to another which, he knows, will cause sorrow.


317 - எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.

எவ்வளவிலும், எப்பொழுதும், எவரையும் இழிவுபடுத்தும் செயலை மனத்தால்கூட நினைக்காமல் இருப்பதே முதன்மையான சிறப்பாகும்.

To work no wilful woe, in any wise, through all the days,
To any living soul, is virtue's highest praise.


Explanation: It is the chief of all virtues not knowingly to do any person evil, even in the lowest degree, and at any time.


318 - தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க் கின்னா செயல்.

பிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன் அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாதல்லவா?

Whose soul has felt the bitter smart of wrong, how can
He wrongs inflict on ever-living soul of man?


Explanation: Why does a man inflict upon other creatures those sufferings, which he has found by experience are sufferings to himself ?


319 - பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்.

பிறருக்குத் தீங்கு விளைவித்துவிட்டோம் என்று ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே, அதேபோன்ற தீங்கு அவரையே தாக்கும்.

If, ere the noontide, you to others evil do,
Before the eventide will evil visit you.


Explanation: If a man inflict sorrow upon others in the morning, it will come upon him unsought in the very evening.


320 - நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.

தீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்து சேரும்; எனவே தீங்கற்ற வாழ்வை விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாது.

O'er every evil-doer evil broodeth still;
He evil shuns who freedom seeks from ill.


Explanation: Sorrow will come upon those who cause pain to others; therfore those, who desire to be free from sorrow, give no pain to others.

Saturday, December 18, 2010

Thirukural - Chapter 31

301 - செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கினென் காவாக்கா லென்.

தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனே சினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?

Where thou hast power thy angry will to work, thy wrath restrain;
Where power is none, what matter if thou check or give it rein?


Explanation: He restrains his anger who restrains it when it can injure; when it cannot injure, what does it matter whether he restrain it, or not ?


302 - செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்லதனின் தீய பிற.

வலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும். மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதைவிடக் கேடு வேறொன்றுமில்லை.

Where power is none to wreak thy wrath, wrath importent is ill;
Where thou hast power thy will to work, 'tis greater, evil still.


Explanation: Anger is bad, even when it cannot injure; when it can injure; there is no greater evil.


303 - மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
பிறத்தல் அதனான் வரும்.

யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும்.

If any rouse thy wrath, the trespass straight forget;
For wrath an endless train of evils will beget.


Explanation: Forget anger towards every one, as fountains of evil spring from it.


304 - நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின்
பகையும் உளவோ பிற.

சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும்.

Wrath robs the face of smiles, the heart of joy,
What other foe to man works such annoy?


Explanation: Is there a greater enemy than anger, which kills both laughter and joy ?


305 - தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.

ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்.

If thou would'st guard thyself, guard against wrath alway;
'Gainst wrath who guards not, him his wrath shall slay.


Explanation: If a man would guard himself, let him guard against anger; if he do not guard it, anger will kill him.


306 - சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.

சினங்கொண்டவரை அழிக்கக் கூடியதாகச் சினமென்னும் தீயே இருப்பதால், அது அவரை மட்டுமின்றி, அவரைப் பாதுகாக்கும் தோணி போன்ற சுற்றத்தையும் அழித்துவிடும்.

Wrath, the fire that slayeth whose draweth near,
Will burn the helpful 'raft' of kindred dear.


Explanation: The fire of anger will burn up even the pleasant raft of friendship.


307 - சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.

நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும். அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும்.

The hand that smites the earth unfailing feels the sting;
So perish they who nurse their wrath as noble thing.


Explanation: Destruction will come upon him who ragards anger as a good thing, as surely as the hand of him who strikes the ground will not fail.


308 - இணரெரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.

தீயினால் சுட்டெரிப்பது போன்ற துன்பங்களை ஒருவன் தொடர்ந்து செய்தாலும் அதற்காக வருந்தி அவன் உறவு கொள்ள வரும் போது சினங்கொள்ளாமல் இருப்பதே நல்லது.

Though men should work thee woe, like touch of tongues of fire.
'Tis well if thou canst save thy soul from burning ire.


Explanation: Though one commit things against you as painful (to bear) as if a bundle of fire had been thrust upon you, it will be well, to refrain, if possible, from anger.


309 - உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி யெனின்.

உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றையெல்லாம் உடனடியாகப் பெற முடியும்.

If man his soul preserve from wrathful fires,
He gains with that whate'er his soul desires.


Explanation: If a man never indulges anger in his heart, he will at once obtain whatever he has thought of.


310 - இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.

எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார். சினத்தை அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார்.

Men of surpassing wrath are like the men who've passed away;
Who wrath renounce, equals of all-renouncing sages they.


Explanation: Those, who give way to excessive anger, are no better than dead men; but those, who are freed from it, are equal to those who are freed (from death).

Wednesday, December 8, 2010

Thirukural - Chapter 30

291 - வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றந்
தீமை யிலாத சொலல்.

பிறருக்கு எள்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும்.

You ask, in lips of men what 'truth' may be;
'Tis speech from every taint of evil free.


Explanation: Truth is the speaking of such words as are free from the least degree of evil (to others).


292 - பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்.

குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்.

Falsehood may take the place of truthful word,
If blessing, free from fault, it can afford.


Explanation: Even falsehood has the nature of truth, if it confer a benefit that is free from fault.


293 - தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்.

Speak not a word which false thy own heart knows
Self-kindled fire within the false one's spirit glows.


Explanation: Let not a man knowingly tell a lie; for after he has told the lie, his mind will burn him (with the memory of his guilt).


294 - உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.

மனத்தால்கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்பவர்கள், மக்கள் மனத்தில் நிலையான இடத்தைப் பெறுவார்கள்.

True to his inmost soul who lives,- enshrined
He lives in souls of all mankind.


Explanation: He who, in his conduct, preserves a mind free from deceit, will dwell in the minds of all men.


295 - மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.

உதட்டளவில் இன்றி உளமார வாய்மை பேசுகிறவர்கள் தவமும், தானமும் செய்கின்றவர்களைவிட உயர்ந்தவர்களாவார்கள்.எ

Greater is he who speaks the truth with full consenting mind.
Than men whose lives have penitence and charity combined.


Explanation: He, who speaks truth with all his heart, is superior to those who make gifts and practise austerities.


296 - பொய்யாமை யன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.

பொய் இல்லாமல் வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறு எதுவுமில்லை; என்றும் நீங்காத அறவழி நலன்களை அளிப்பது அந்த வாழ்வேயாகும்.

No praise like that of words from falsehood free;
This every virtue yields spontaneously.


Explanation: There is no praise like the praise of never uttering a falsehood: without causing any suffering, it will lead to every virtue.


297 - பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.

செய்யக்கூடாததைச் செய்யாததால் விளையும் நன்மையைவிடப் பொய் கூறாத பண்பு பொய்த்துப் போகாமல் கடைப்பிடிக்கும் அறவழி நன்மை தருவதாகும்.

If all your life be utter truth, the truth alone,
'Tis well, though other virtuous acts be left undone.


Explanation: If a man has the power to abstain from falsehood, it will be well with him, even though he practise no other virtue.


298 - புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.

நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம் அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும் வாய்மை வேண்டும்.

Outward purity the water will bestow;
Inward purity from truth alone will flow.


Explanation: Purity of body is produced by water and purity of mind by truthfulness.


299 - எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.

புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை உயர்ந்தோன் எனக் காட்டும் ஒளிமிக்க விளக்காகும்.

Every lamp is not a lamp in wise men's sight;
That's the lamp with truth's pure radiance bright.


Explanation: All lamps of nature are not lamps; the lamp of truth is the lamp of the wise.


300 - யாமெய்யாக் கண்டவற்று ளில்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.

வாய்மையைப் போல் சிறந்த பண்பு வேறொன்றுமே இல்லை என்பதுதான் ஆராய்ந்து உணரப்பட்ட உண்மையாகும்.

Of all good things we've scanned with studious care,
There's nought that can with truthfulness compare.


Explanation: Amidst all that we have seen (described) as real (excellence), there is nothing so good as truthfulness.