Monday, March 28, 2011

Thirukural - Chapter 41 Cont...

410 - விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல் கற்றாரோ டேனை யவர்.

மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமிடையே என்ன வேற்றுமையோ, அதே அளவு வேற்றுமை அறிவு நூல்களைப் படித்தவர்களுக்கும், அந்த நூல்களைப் படிக்காதவர்களுக்கும் இடையே உண்டு.

Learning's irradiating grace who gain,
Others excel, as men the bestial train.


Explanation: As beasts by the side of men, so are other men by the side of those who are learned in celebrated works.

Sunday, March 27, 2011

Thirukural - Chapter 41 Cont...

409 - மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங் கற்றா ரனைத்திலர் பாடு.

கற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டைப் போக்கிவிடும்.

Lower are men unlearned, though noble be their race,
Than low-born men adorned with learning's grace.


Explanation: The unlearned, though born in a high caste, are not equal in dignity to the learned; though they may have been born in a low caste.

Saturday, March 26, 2011

Thirukural - Chapter 41 Cont...

408 - நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கண் பட்ட திரு.

முட்டாள்களிடம் குவிந்துள்ள செல்வம், நல்லவர்களை வாட்டும் வறுமையைவிட அதிக துன்பத்தைத் தரும்.

To men unlearned, from fortune's favour greater-evil springs
Than poverty to men of goodly wisdom brings.


Explanation: Wealth, gained by the unlearned, will give more sorrow than the poverty which may come upon the learned.

Friday, March 25, 2011

Thirukural - Chapter 41 Cont...

407 - நுண்மாண் நுழைபுல மில்லான் எழினலம் மண்மாண் புனைபாவை யற்று.

அழகான தோற்றம் மட்டுமே இருந்து, ஆழ்ந்து தெளிந்த அறிவில்லாமல் இருப்பவர்கள், கண்ணைக் கவரும் மண் பொம்மையைப் போன்றவர்களாகவே மதிக்கப்படுவார்கள்.

Who lack the power of subtle, large, and penetrating sense,
Like puppet, decked with ornaments of clay, their beauty's vain pretence.


Explanation: The beauty and goodness of one who is destitute of knowledge by the study of great and exquisite works, is like (the beauty and goodness) of a painted earthen doll.

Thursday, March 24, 2011

Thirukural - Chapter 41 Cont...

406 - உளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக் களரனையர் கல்லா தவர்.

கல்லாதவர்களைக் களர்நிலத்துக்கு ஒப்பிடுவதே பொருத்தமானது. காரணம் அவர்கள் வெறும் நடைப்பிணங்களாகவே கருதப்படுவார்கள்.

'They are': so much is true of men untaught;
But, like a barren field, they yield us nought!


Explanation: The unlearned are like worthless barren land: all that can be said of them is, that they exist.

Wednesday, March 23, 2011

Thirukural - Chapter 41 Cont...

405 - கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும்.

கல்வியறிவில்லாதவர்கள் தங்களைப் பெரிய மேதைகளைப் போல் காட்டிக் கொள்ளும் போலி வேடம், கற்றுத் தேர்ந்த அறிஞர்களிடம் அவர்கள் உரையாடும்போது கலைந்து போய்விடும்.

As worthless shows the worth of man unlearned,
When council meets, by words he speaks discerned.


Explanation: The self-conceit of an unlearned man will fade away, as soon as he speaks in an assembly (of the learned).

Tuesday, March 22, 2011

Thirukural - Chapter 41 Cont...

404 - கல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினுங் கொள்ளார் அறிவுடை யார்.

கல்வி கற்காதவனுக்கு இயற்கையாகவே அறிவு இருந்தாலும்கூட, அவனைக் கல்வியில் சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

From blockheads' lips, when words of wisdom glibly flow,
The wise receive them not, though good they seem to show.


Explanation: Although the natural knowledge of an unlearned man may be very good, the wise will not accept for true knowledge.

Monday, March 21, 2011

Thirukural - Chapter 41 Cont...

403 - கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் சொல்லா திருக்கப் பெறின்.

கற்றவர்களின் முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால் கல்வி கற்காதவர்கள்கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள்.

The blockheads, too, may men of worth appear,
If they can keep from speaking where the learned hear!


Explanation: The unlearned also are very excellent men, if they know how to keep silence before the learned.

Sunday, March 20, 2011

Thirukural - Chapter 41 Cont...

402 - கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று.

கல்லாதவனின் சொல்கேட்க விரும்புவது, மார்பகம் இல்லாத பெண்மீது மையல் கொள்வதற்கு ஒப்பானது.

Like those who doat on hoyden's undeveloped charms are they,
Of learning void, who eagerly their power of words display.


Explanation: The desire of the unlearned to speak (in an assembly), is like a woman without breasts desiring (the enjoyment of ) woman-hood.

Saturday, March 19, 2011

Thirukural - Chapter 41

401 - அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல்.

நிறைந்த அறிவாற்றல் இல்லாமல் அவையில் பேசுவது ஆடுவதற்கான கட்டம் போட்டுக் கொள்ளாமலே சொக்கட்டான் விளையாடுவதைப் போன்றதாகும்.

Like those at draughts would play without the chequered square,
Men void of ample lore would counsels of the learned share.

Explanation: To speak in an assembly (of the learned) without fullness of knowledge, is like playing at chess (on a board) without squares. 

Friday, March 18, 2011

Thirukural - Chapter 40

391 - கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும். கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும்.

So learn that you may full and faultless learning gain,
Then in obedience meet to lessons learnt remain.


Explanation: Let a man learn thoroughly whatever he may learn, and let his conduct be worthy of his learning.


392 - எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டுங்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

எண்ணும் எழுத்தும் எனப்படும் அறிவுக் கண்களைப் பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள்.

The twain that lore of numbers and of letters give
Are eyes, the wise declare, to all on earth that live.


Explanation: Letters and numbers are the two eyes of man.


393 - கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.

கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார். கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும்.

Men who learning gain have eyes, men say;
Blockheads' faces pairs of sores display.


Explanation: The learned are said to have eyes, but the unlearned have (merely) two sores in their face.


394 - உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.

மகிழ்ச்சி பொங்கிடச் சேர்ந்து பழகுவதும், பிரிந்திட நேரும் போது மனங்கலங்குவதும் அறிவிற் சிறந்தோர் செயலாகும்.

You meet with joy, with pleasant thought you part;
Such is the learned scholar's wonderous art!


Explanation: It is the part of the learned to give joy to those whom they meet, and on leaving, to make them think (Oh! when shall we meet them again.)


395 - உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.

அறிவுடையார் முன் அறிவில்லாதவர் போல் தாழ்ந்து நின்று, மேலும் கற்றுக்கொள்பவர்களின் ஆர்வத்தைக் கற்றுக் கொள்ளாதவர்கள் கடைநிலை மாந்தராக கருதப்படுவார்கள்.

With soul submiss they stand, as paupers front a rich man's face;
Yet learned men are first; th'unlearned stand in lowest place.


Explanation: The unlearned are inferior to the learned, before whom they stand begging, as the destitute before the wealthy.


396 - தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.

தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்.

In sandy soil, when deep you delve, you reach the springs below;
The more you learn, the freer streams of wisdom flow.


Explanation: Water will flow from a well in the sand in proportion to the depth to which it is dug, and knowledge will flow from a man in proportion to his learning.


397 - யாதானும் டாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.

கற்றோர்க்கு எல்லா நாடுகளிலும் எல்லா ஊர்களிலும் சிறப்பு என்கிறபோது, ஒருவன் சாகும் வரையில் கற்காமல் காலம் கழிப்பது ஏனோ?

The learned make each land their own, in every city find a home;
Who, till they die; learn nought, along what weary ways they roam!


Explanation: How is it that any one can remain without learning, even to his death, when (to the learned man) every country is his own (country), and every town his own (town) ?


398 - ஒருமைக்கண் தான்னற்ற கல்வி ஒருவற்
கெழுமையும் ஏமாப் புடைத்து.

ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்.

The man who store of learning gains,
In one, through seven worlds, bliss attains.


Explanation: The learning, which a man has acquired in one birth, will yield him pleasure during seven births.


399 - தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.

தமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டு, அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றைக் கற்றிட விரும்புவார்கள்.

Their joy is joy of all the world, they see; thus more
The learners learn to love their cherished lore.


Explanation: The learned will long (for more learning), when they see that while it gives pleasure to themselves, the world also derives pleasure from it.


400 - கேடில் விழுச் செல்வங் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.

கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை.

Learning is excellence of wealth that none destroy;
To man nought else affords reality of joy.


Explanation: Learning is the true imperishable riches; all other things are not riches.

Tuesday, March 8, 2011

Thirukural - Chapter 39

381 - படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசரு ளேறு.

ஆற்றல்மிகு படை, அறிவார்ந்த குடிமக்கள், குறையா வளம், குறையற்ற அமைச்சு, முரிபடாத நட்பு, மோதியழிக்க முடியாத அரண் ஆகிய ஆறு சிறப்புகளும் உடையதே அரசுகளுக்கிடையே ஆண் சிங்கம் போன்ற அரசாகும்.

An army, people, wealth, a minister, friends, fort: six things-
Who owns them all, a lion lives amid the kings.


Explanation: He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.


382 - அஞ்சாமை ஈ.கை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற் கியல்பு.

துணிவு, இரக்க சிந்தை, அறிவாற்றல், உயர்ந்த குறிக்கோளை

Courage, a liberal hand, wisdom, and energy: these four
Are qualities a king adorn for evermore.


Explanation: Never to fail in these four things, fearlessness, liberality, wisdom, and energy, is the kingly character.


383 - தூங்காமை கல்வி துணிவுடைமை அம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு.

காலம் தாழ்த்தாத விரைவான நடவடிக்கைகளும், அறிவுடைமையும், துணிவும் நாடாளுகின்றவர்களுக்குத் தேவையானவையும், நீங்காமல் நிலைத்திருக்க வேண்டியவையுமான பண்புகளாகும்.

A sleepless promptitude, knowledge, decision strong:
These three for aye to rulers of the land belong.


Explanation: These three things, viz., vigilance, learning, and bravery, should never be wanting in the ruler of a country.


384 - அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மான முடைய தரசு.

அறநெறி தவறாமலும், குற்றமேதும் இழைக்காமலும், வீரத்துடனும், மானத்துடனும் ஆட்சி நடத்துபவர்களே சிறந்தவர்களாவார்கள்.

Kingship, in virtue failing not, all vice restrains,
In courage failing not, it honour's grace maintains.


Explanation: He is a king who, with manly modesty, swerves not from virtue, and refrains from vice.


385 - இயற்றலும் ஈ.ட்டலுங் காத்தலுங் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.

முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுக்காத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும்.

A king is he who treasure gains, stores up, defends,
And duly for his kingdom's weal expends.


Explanation: He is a king who is able to acquire (wealth), to lay it up, to guard, and to distribute it.


386 - காட்சி கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.

காட்சிக்கு எளிமையும், கடுஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும்.

Where king is easy of access, where no harsh word repels,
That land's high praises every subject swells.


Explanation: The whole world will exalt the country of the king who is easy of access, and who is free from harsh language.


387 - இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு.

வாக்கில் இனிமையும், பிறர்க்கு வழங்கிக் காத்திடும் தன்மையும் கொண்டவர்க்கு இவ்வையகமே வசப்படும்.

With pleasant speech, who gives and guards with powerful liberal hand,
He sees the world obedient all to his command.


Explanation: The world will praise and submit itself to the mind of the king who is able to give with affability, and to protect all who come to him.


388 - முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்
கிறையென்று வைக்கப் படும்.

நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளன்தான் மக்களுக்குத் தலைவன் எனப் போற்றப்படுவான்.

Who guards the realm and justice strict maintains,
That king as god o'er subject people reigns.


Explanation: That king, will be esteemed a God among men, who performs his own duties, and protects (his subjects).


389 - செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கு முலகு.

காதைக் குடையக்கூடிய கடுஞ்சொற்களையும் பொறுத்துக் கொள்கிற பண்பாளரின் அரசுக்குத்தான் மக்களிடம் மதிப்பு இருக்கும்.

The king of worth, who can words bitter to his ear endure,
Beneath the shadow of his power the world abides secure.


Explanation: The whole world will dwell under the umbrella of the king, who can bear words that embitter the ear.


390 - கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி.

நலவாழ்வுக்கு வேண்டியவற்றை வழங்கியும், நிலையுணர்ந்து கருணை காட்டியும், நடுநிலை தவறாமல் ஆட்சி நடத்தியும், மக்களைப் பேணிக் காப்பதே ஓர் அரசுக்குப் புகழொளி சேர்ப்பதாகும்.

Gifts, grace, right sceptre, care of people's weal;
These four a light of dreaded kings reveal.


Explanation: He is the light of kings who has there four things, beneficence, benevolence, rectitude, and care for his people.