201 - தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் With sinful act men cease to feel the dread of ill within, The excellent will dread the wanton pride of cherished sin. |
Explanation: தீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள்; தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள். Those who have experience of evil deeds will not fear, but the excellent will fear the pride of sin. |
202 - தீயவை தீய பயத்தலால் தீயவை Since evils new from evils ever grow, Evil than fire works out more dreaded woe. |
Explanation: தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும். Because evil produces evil, therefore should evil be feared more than fire. |
203 - அறிவினு ளெல்லாந் தலையென்ப தீய Even to those that hate make no return of ill; So shalt thou wisdom's highest law, 'tis said, fulfil. |
Explanation: தீமை செய்தவர்க்கு அதையே திருப்பிச் செய்யாமலிருத்தலை, எல்லா அறிவிலும் முதன்மையான அறிவு என்று போற்றுவர். To do no evil to enemies will be called the chief of all virtues. |
204 - மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் Though good thy soul forget, plot not thy neighbour's fall, Thy plans shall 'virtue's Power' by ruin to thyself forestall. |
Explanation: மறந்தும்கூட மற்றவர்க்குக் கேடு செய்ய நினைக்கக் கூடாது; அப்படி நினைத்தால் அவனுக்குக் கேடு உண்டாக்க அவனை அறம் முற்றுகையிட்டு விடும். Even though forgetfulness meditate not the ruin of another. Virtue will meditate the ruin of him who thus meditates. |
205 - இலனென்று தீயவை செய்யற்க செய்யின் Make not thy poverty a plea for ill; Thy evil deeds will make thee poorer still. |
Explanation: வறுமையின் காரணமாக ஒருவன் தீய செயல்களில் ஈ.டுபடக்கூடாது; அப்படி ஈ.டுபட்டால் மீண்டும் அவன் வறுமையிலேயே வாட வேண்டியிருக்கும். Commit not evil, saying, "I am poor": if you do, you will become poorer still. |
Thirukkural is a masterpiece of Tamil literature with the highest and purest expressions of human thought. It was written by Thiruvalluvar who was a celebrated Tamil poet
Monday, August 30, 2010
Thirukural - Chapter 21
Wednesday, August 25, 2010
Thirukural - Chapter 20
191 - பல்லார் முனியப் பயனில சொல்லுவான் Words without sense, while chafe the wise, Who babbles, him will all despise. |
Explanation: பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள். He who to the disgust of many speaks useless things will be despised by all. |
192 - பயனில பல்லார்முன் சொல்லல் நயனில Words without sense, where many wise men hear, to pour Than deeds to friends ungracious done offendeth more. |
Explanation: பலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச் செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும். To speak useless things in the presence of many is a greater evil than to do unkind things towards friends. |
193 - நயனில னென்பது சொல்லும் பயனில Diffusive speech of useless words proclaims A man who never righteous wisdom gains. |
Explanation: பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும். That conversation in which a man utters forth useless things will say of him "he is without virtue." |
194 - நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் Unmeaning, worthless words, said to the multitude, To none delight afford, and sever men from good. |
Explanation: பயனற்றதும், பண்பற்றதுமான சொற்களைப் பலர்முன் பகர்தல் மகிழ்ச்சியைக் குலைத்து, நன்மையை மாய்க்கும். The words devoid of profit or pleasure which a man speaks will, being inconsistent with virtue, remove him from goodness. |
195 - சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில Gone are both fame and boasted excellence, When men of worth speak of words devoid of sense. |
Explanation: நல்ல பண்புடையவர் பயனில்லாத சொற்களைக் கூறுவாரானால் அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கி விடும். If the good speak vain words their eminence and excellence will leave them. |
196 - பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல் Who makes display of idle words' inanity, Call him not man, -chaff of humanity! |
Explanation: பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும். Call not him a man who parades forth his empty words. Call him the chaff of men. |
197 - நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் Let those who list speak things that no delight afford, 'Tis good for men of worth to speak no idle word. |
Explanation: பண்பாளர்கள், இனிமையல்லாத சொற்களைக்கூடச் சொல்லி விடலாம்; ஆனால் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருப்பதே நல்லது. Let the wise if they will, speak things without excellence; it will be well for them not to speak useless things. |
198 - அரும்பய னாயும் அறிவினார் சொல்லார் The wise who weigh the worth of every utterance, Speak none but words of deep significance. |
Explanation: அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர், பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார். The wise who seek after rare pleasures will not speak words that have not much weight in them. |
199 - பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த The men of vision pure, from wildering folly free, Not e'en in thoughtless hour, speak words of vanity. |
Explanation: மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார். Those wise men who are without faults and are freed from ignorance will not even forgetfully speak things that profit not. |
200 - சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க If speak you will, speak words that fruit afford, If speak you will, speak never fruitless word. |
Explanation: பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும். Speak what is useful, and speak not useless words. |
Sunday, August 15, 2010
Thirukural - Chapter 19
181 - அறங்கூறா னல்ல செயினும் ஒருவன் Though virtuous words his lips speak not, and all his deeds are ill. If neighbour he defame not, there's good within him still. |
Explanation: அறநெறியைப் போற்றாமலும், அவ்வழியில் நடக்காமலும்கூட இருக்கின்ற சிலர் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசாமல் இருந்தால், அது அவர்களுக்கு நல்லது. Though one do not even speak of virtue and live in sin, it will be well if it be said of him "he does not backbite." |
182 - அறனழீஇ யல்லவை செய்தலின் தீதே Than he who virtue scorns, and evil deeds performs, more vile, Is he that slanders friend, then meets him with false smile. |
Explanation: ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது பொய்யாகச் சிரித்துப் பேசிவிட்டு, அவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிப் பொல்லாங்கு பேசுவது அறவழியைப் புறக்கணித்து விட்டு, அதற்கு மாறான காரியங்களைச் செய்வதைவிடக் கொடுமையானது. To smile deceitfully (in another's presence) after having reviled him to his destruction (behind his back) is a greater evil than the commission of (every other) sin and the destruction of (every) virtue. |
183 - புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல் 'Tis greater gain of virtuous good for man to die, Than live to slander absent friend, and falsely praise when nigh. |
Explanation: கண்ட இடத்தில் ஒன்றும், காணாத இடத்தில் வேறொன்றுமாகப் புறங்கூறிப் பொய்மையாக நடந்து உயிர் வாழ்வதைவிடச் சாவது நன்று. Death rather than life will confer upon the deceitful backbiter the profit which (the treatises on) virtue point out. |
184 - கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க In presence though unkindly words you speak, say not In absence words whose ill result exceeds your thought. |
Explanation: நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது தவறு. Though you speak without kindness before another's face speak not in his absence words which regard not the evil subsequently resulting from it. |
185 - அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் The slanderous meanness that an absent friend defames, 'This man in words owns virtue, not in heart,' proclaims. |
Explanation: ஒருவன் பிறரைப்பற்றிப் புறம் பேசுகிற சிறுமைத்தன்மையைக்கொண்டே அவன் அறவழி நிற்பவன் அல்லன் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். The emptiness of that man's mind who (merely) praises virtue will be seen from the meanness of reviling another behind his back. |
186 - பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந் Who on his neighbours' sins delights to dwell, The story of his sins, culled out with care, the world will tell. |
Explanation: பிறர்மீது ஒருவன் புறங்கூறித் திரிகிறான் என்றால் அவனது பழிச் செயல்களை ஆராய்ந்து அவற்றில் கொடுமையானவைகளை அவன் மீது கூற நேரிடும். The character of the faults of that man who publishes abroad the faults of others will be sought out and published. |
187 - பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி With friendly art who know not pleasant words to say, Speak words that sever hearts, and drive choice friends away. |
Explanation: இனிமையாகப் பழகி நட்புறவைத் தொடரத் தெரியாதவர்கள், நட்புக் கெடுமளவுக்குப் புறங்கூறி நண்பர்களை இழந்து விடுவார்கள். Those who know not to live in friendship with amusing conversation will by back-biting estrange even their relatives. |
188 - துன்னியார் குற்றமுந் தூற்றும் மரபினர் Whose nature bids them faults of closest friends proclaim What mercy will they show to other men's good name? |
Explanation: நெருங்கிப் பழகியவரின் குறையைக்கூடப் புறம் பேசித் தூற்றுகிற குணமுடையவர்கள் அப்படிப் பழகாத அயலாரைப் பற்றி என்னதான் பேச மாட்டார்கள்? What will those not do to strangers whose nature leads them to publish abroad the faults of their intimate friends ? |
189 - அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப் 'Tis charity, I ween, that makes the earth sustain their load. Who, neighbours' absence watching, tales or slander tell abroad. |
Explanation: ஒருவர் நேரில் இல்லாதபோது பழிச்சொல் கூறுவோனுடைய உடலை `இவனைச் சுமப்பதும் அறமே' என்று கருதித்தான் நிலம் சுமக்கிறது. The world through charity supports the weight of those who reproach others observing their absence. |
190 - ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் If each his own, as neighbours' faults would scan, Could any evil hap to living man? |
Explanation: பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பார்களேயானால் புறங்கூறும் பழக்கமும் போகும்; வாழ்க்கையும் நிம்மதியாக அமையும். If they observed their own faults as they observe the faults of others, would any evil happen to men ? |
Thursday, August 5, 2010
Thirukural - Chapter 18 Cont..
176 - அருள்வெஃகி யாற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் Though, grace desiring, he in virtue's way stand strong, He's lost who wealth desires, and ponders deeds of wrong. |
Explanation: அருளை விரும்பி அதனை அடைவதற்கான வழியில் செல்பவன் தவறிப்போய்ப் பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத செயலில் ஈ.டுபட்டால் கெட்டொழிய நேரிடும். If he, who through desire of the virtue of kindness abides in the domestic state i.e., the path in which it may be obtained, covet (the property of others) and think of evil methods (to obtain it), he will perish. |
177 - வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் Seek not increase by greed of gain acquired; That fruit matured yields never good desired. |
Explanation: பிறர் பொருளைக் கவர்ந்து ஒருவன் வளம்பெற விரும்பினால் அந்த வளத்தின் பயன், நலம் தருவதாக இருக்காது. Desire not the gain of covetousness. In the enjoyment of its fruits there is no glory. |
178 - அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை What saves prosperity from swift decline? Absence of lust to make another's cherished riches thine! |
Explanation: தன்னுடைய செல்வச் செழிப்பு குறையாமலிருக்க வேண்டுமென்றால் பிறருடைய பொருளையும் தானே அடைய வேண்டுமென்று ஆசைப்படாமலிருக்க வேண்டும். If it is weighed, "what is the indestructibility of wealth," it is freedom from covetousness. |
179 - அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேருந் Good fortune draws anigh in helpful time of need, To him who, schooled in virtue, guards his soul from greed. |
Explanation: பிறர் பொருளைக் கவர விரும்பாத அறநெறி உணர்ந்த அறிஞர் பெருமக்களின் ஆற்றலுக்கேற்ப அவர்களிடம் செல்வம் சேரும். Lakshmi, knowing the manner (in which she may approach) will immediately come to those wise men who, knowing that it is virtue, covet not the property of others. |
180 - இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும் From thoughtless lust of other's goods springs fatal ill, Greatness of soul that covets not shall triumph still. |
Explanation: விளைவுகளைப் பற்றி நினைக்காமல் பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பினால் அழிவும், அத்தகைய விருப்பம் கொள்ளாதிருந்தால் வாழ்க்கையில் வெற்றியும் கிட்டும். To covet (the wealth of another) regardless of consequences will bring destruction. That greatness (of mind) which covets not will give victory. |
Subscribe to:
Posts (Atom)