Sunday, January 8, 2017

கடவுள் வாழ்த்து குறள் 9 - Thirukkural Couplet 9

குறள் :
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

உரை:

      எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே.

Translation:

Before His foot, 'the Eight-fold Excellence,' with unbent head, Who stands, like palsied sense, is to all living functions dead.
Explanation:
The head that worships not the feet of Him who is possessed of eight attributes, is as useless as a sense without the power of sensation.

கடவுள் வாழ்த்து குறள் 8 - Thirukkural Couplet 8

குறள் :
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

உரை:

      அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்.

Translation:

Unless His feet 'the Sea of Good, the Fair and Bountiful,' men gain, 'Tis hard
the further bank of being's changeful sea to attain.
Explanation:
None can swim the sea of vice, but those who are united to the feet of that
gracious Being who is a sea of virtue.

கடவுள் வாழ்த்து குறள் 7 - Thirukkural Couplet 7

குறள் :
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

உரை:

      தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்.

Translation:

Unless His foot, 'to Whom none can compare,gain, 'This hard for mind to find relief from anxious pain.

Explanation:

Anxiety of mind cannot be removed, except from those who are united to the feet of Him who is incomparable.

Friday, January 6, 2017

கடவுள் வாழ்த்து குறள் 6 - Thirukkural Couplet 6

குறள் :
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

உரை:

      மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றர் நெடுங்காலம் வாழ்வார்.

Translation:

Long live they blest, who 've stood in path from falsehood freed; His, 'Who quenched lusts that from the sense-gates five proceed'.

Explanation:

Those shall long proposer who abide in the faultless way of Him who has destroyed the five desires of the senses.

கடவுள் வாழ்த்து குறள் 5 - Thirukkural Couplet 5

குறள் :
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

உரை:

      கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை.

Translation:

The men, who on the 'King's' true praised delight to dwell, Affects not them the fruit of deeds done ill or well.

Explanation:

The two-fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true praise of God

Wednesday, January 4, 2017

கடவுள் வாழ்த்து குறள் 4 - Thirukkural Couplet 4

குறள் :
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல

உரை:

      எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை.

Translation:
His foot, 'Whom want affects not, irks not grief,' who gain
Shall not, through every time, of any woes complain.

Explanation:

To those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come.

கடவுள் வாழ்த்து குறள் 3 - Thirukkural Couplet 3

குறள் :
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

உரை:

   மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த    திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்.

Translation:

His feet, 'Who o'er the full-blown flower hath past,' who gain In bliss long time shall dwell above this earthly plain.

Explanation:

They who are united to the glorious feet of Him who occupies swiftly the flower of the mind, shall flourish in the highest of worlds (heaven).